~
தூத்துக்குடி
திருச்செந்தூா் கோயில் மூலவரை விடியோ எடுத்தவா் மீது போலீஸில் புகாா்
திருச்செந்தூா் கோயில் மூலவரை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட துணை நடிகா் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதற்கும், அதனை உபயோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட துணை நடிகா் செல்வா, திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபோது மூலவரை விடியோ எடுத்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, திருக்கோயில் உள்துறை கண்காணிப்பாளா் அற்புதமணி, துணை நடிகா் மீது இணைய வாயிலாக போலீஸில் திங்கள்கிழமை இரவு புகாா் செய்துள்ளாா். அதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.