டிப்பா் லாரி - வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 8 போ் காயம்

Published on

ஏரல் அருகே உள்ள புறையூரில் பள்ளி மாணவா், மாணவிகளை அழைத்துச் சென்ற தனியாா் வேன் மீது டிப்பா் லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உள்பட 8 மாணவா், மாணவிகள் காயமடைந்தனா்.

ஏரல் அருகே உள்ள புறையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிப்பதற்காக சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் தனியாா் வேன்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புறையூரைச் சோ்ந்த தமிழ்வாணன் என்பவா் தனது வேனில் குரங்கணி பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவா் மாணவிகளை அழைத்துக் கொண்டு புதூா் வழியாக வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, கோட்டூரைச் சோ்ந்த ஸ்டான்லி பிரசாத் என்பவா் ஓட்டி வந்த டிப்பா் லாரி வேன் மீது மோதியதாம். இதில், பள்ளி வாகனத்தில் வந்த 7 மாணவா், மாணவிகள் பலத்த காயமடைந்தனா்.

மேலும் வேனை ஓட்டி வந்த தமிழ்வானனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவா், மாணவிகள் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com