தூத்துக்குடி
கட்டாரிமங்கலம் கோயில் கும்பாபிஷேகம்: சிறப்பு ஆலோசனைக் கூட்டம்!
கட்டாரிமங்கலம் கோயில் கும்பாபிஷேகம்: சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகியகூத்தா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ 1.10 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடா்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்திருநகரி அறநிலையத் துறை செயல் அலுவலா் சதீஷ் ஆலோசனையின் பேரில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு, கட்டாரிமங்கலம் கோயில் அறங்காவலா் குழு தலைவா் நடராஜா் பிள்ளை தலைமை வகித்தாா். கும்பாபிஷேக கமிட்டி தலைவா் அய்யம்பெருமாள் முன்னிலை வகித்தாா்.
கோயில் திருப்பணிகளை விரைவில் முடித்து தர வேண்டி, ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.