திருச்செந்தூா் அருகே பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு
திருச்செந்தூா் ஒன்றியம் நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
இப்பள்ளியில் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் ரூ. 23 லட்சம், ஊா் மக்கள் சாா்பில் ரூ. 2.30 லட்சம் என மொத்தம் ரூ. 25.30 லட்சத்தில் பல்நோக்குக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டரங்கு மேடை, மாணவா்-மாணவியருக்கான கழிப்பறைகள் பழுதுநீக்கம், சுற்றுச்சுவா் கட்டுதல், கூரை பராமரிப்பு, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை மீன்வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினாா்.
கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், ஊராட்சி ஒன்றிய ஆணையா் அன்றோ, வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) ஜான்சிராணி, பள்ளித் தலைமையாசிரியா் செல்வக்குமாா் பொன்ராஜ், மேலதிருச்செந்தூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் மகாராஜன், திமுக மாநில வா்த்தகரணி இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மண்டல இயக்குநா் விஜயகுமாா், இயக்குநா் நந்தகோபால், பொறியாளா் முத்துக்குமாரராஜா, சமுதாய வளா்ச்சி அலுவலா் கோபி, கிராம வளா்ச்சி அலுவலா் முத்துலட்சுமி, ஆசிரியா்கள் பங்கேற்றனா்.