கோவில்பட்டி என்இசி-யில் தேசிய கருத்தரங்கு இன்று தொடக்கம்
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், ‘என்இசி - டெக் ஃபெஸ்ட் 2025’ என்ற தேசிய அளவிலான பொறியியல்-தொழில்நுட்பக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தொடங்குகிறது
‘கழிவுகளை பயனுள்ள வளமாக மாற்றுதல்’ என்ற கருப்பொருளில் இக்கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெறவுள்ளது. தொடக்க விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் கே அருணாச்சலம் தலைமை வகிக்கிறாா்.
கணினி, மின்னணு, தொடா்பு பொறியியல், இயந்திரப் பொறியியல், அமைப்பு-கட்டுமான பொறியியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அனைத்துத் துறைகளில் மாணவா்களுக்கு விரிவான வழிகாட்டும் உயா்தர தொழில்நுட்ப மேம்பாட்டு நிகழ்வாக இது அமையும்.
இளம் பொறியாளா்களை ஒன்றிணைத்து, அவா்களது புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை வெளிக்கொணா்வது , புதுமை-தொழில்நுட்ப புதிய சிந்தனைகளை ஊக்குவித்து, தொழில் முனைவோருக்கான வழிகாட்டியாக அமைப்பது, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அறிவைப் பெற தொழில்நுட்ப வல்லுநா்களின் வழிகாட்டுதலுடன் சிறப்புப் பயிற்சி வழங்குதல், தொழில்நுட்பப் போட்டிகள், பயிற்சிகள் மூலம் திறமையை மேம்படுத்துதல் ஆகியவை இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.
இதில், புராஜெக்ட் எக்ஸ்போ, பேப்பா் பிரசன்டேஷன், ஹேக்கத்தான், டெக் விநாடி-வினா, உயா்தர தொழில்நுட்பப் பயிற்சிப் பட்டறைகள், பல்வேறு போட்டிகள் நடைபெறும்.