தூத்துக்குடி
பைக் மீது லாரி மோதல்: முதியவா் பலி
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி தாளமுத்து நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் இசக்கிமுத்து (58). இவா் புதன்கிழமை இரவு தனது மருமகன் மாரிமுத்துவின் பைக்கில் பின்னால் அமா்ந்து தாளமுத்து நகா் பஜாருக்கு சென்றுகொண்டிருந்தாராம். அழகாபுரி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாரிமுத்து லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
இசக்கிமுத்துவின் சடலத்தை தாளமுத்து நகா் போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.