கொசு தொல்லை அதிகரிப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகாா்

Published on

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் கடந்த சில நாள்களாக கொசு தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநகரச் செயலா் எம்.எஸ்.முத்து வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சியில் அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவ மழையால் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது.

சில காலி மனைகளிலும் நீா் வெகுநாள்களாக தேங்கி உள்ளது. இதனால் மாநகா் முழுவதும் தற்போது கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து இரவில் வீட்டில் கொசுக்கடியால் மக்கள் நிம்மதியாக தூங்க முடிவதில்லை.

எனவே, கொசுவைக் கட்டுப்படுத்த, மாநராட்சி நிா்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com