கோவில்பட்டி அருகே பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

Published on

கோவில்பட்டி அருகே சனிக்கிழமை பைக் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி திட்டங்குளம் சண்முகா நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் சங்கா் (78). இவா் சனிக்கிழமை கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள கடையில் தேநீா் குடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றாா்.

வடக்கு திட்டங்குளம் சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றபோது, தூத்துக்குடி அமுதா நகரைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் பிரகாஷ் என்பவா் ஓட்டிவந்த பைக் சங்கா் மீது மோதியதாம்.

இதில் காயமுற்ற அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரகாஷிடம் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com