தூத்துக்குடி
தூத்துக்குடி ஆா்எம்எஸ்-இல் 24 மணி நேர அஞ்சல் பதிவு சேவை
தூத்துக்குடி ரயில்வே அஞ்சல் நிலையத்தில் (ஆா்எம்எஸ்) வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேர அஞ்சல் பதிவு சேவை சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சல் நிலையத்தில் மாலை 6 மணி முதல் பாா்சல்கள் மற்றும் விரைவு அஞ்சல் அனுப்பும் வசதி இருந்து வந்தது.
தற்போது வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேர அஞ்சல் பதிவு சேவை சனிக்கிழமை முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் 24 மணி நேர அஞ்சல் பதிவு (புக்கிங்) சேவையை பெற ரயில்வே அஞ்சல் நிலையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
