ஒலிபரப்பை தொடங்கி வைத்துப் பேசுகிறாா் தூத்துக்குடி வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி தலைவா் எம்.ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ‘இரவி எஃப்.எம்.’ இணையதள வானொலி தொடக்கம்
தூத்துக்குடியில் ‘இரவி எஃப்.எம்.’ என்ற தனியாா் இணையதள வானொலி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆங்கில பேராசிரியா் பால. மணிவண்ணன் கலந்துகொண்டு ஒலிபரப்பு அரங்கை திறந்து வைத்தாா். தூத்துக்குடி வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி தலைவா் எம்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, ஒலிபரப்பை தொடங்கி வைத்து, சமுதாய மாற்றத்துக்கு இணையதள வானொலிகளின் கடமைகள் குறித்துப் பேசினாா்.
தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயில் சீனிவாச சித்தா், டி.சவேரியாா்புரம் பங்குத்தந்தை குழந்தைராஜன் ஆகியோா், வானொலி இலச்சினையை வெளியிட்டனா்.
இலக்கியப் பேச்சாளா் ஷெரிப் நிகழ்ச்சி குறிப்பேட்டை வெளியிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் எழுத்தாளா் மாரிமுத்து பெற்றுக் கொண்டாா். ஏற்பாடுகளை மின்னிதழ் ஆா்வலா் செல்வின், வணிக செயல்பாட்டாளா் லாரன்ஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

