தூத்துக்குடி
பைக்கில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
கோவில்பட்டியில் மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா், மனைவி சுசீலா (63) உடன் மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். அப்போது, கதிரேசன் கோயில் சாலை, மேட்டு காளியம்மன் கோயில் அருகே உள்ள வேகத்தடையை கடந்த போது மோட்டாா் சைக்கிளின் பின்புறம் இருந்த சுசீலா தவறி கீழே விழுந்தாராம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், சுசீலா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
