வாளுடன் இருந்த இளைஞா் கைது

Published on

கோவில்பட்டி அருகே வாளுடன் இருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையில் போலீஸாா், சனிக்கிழமை மந்திதோப்பு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இந்திரா காலனியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்ட போது, அவரது முதுகின் பின்னால் சட்டையில் வாள் வைத்திருப்பது தெரியவந்ததாம்.

விசாரணையில், மந்திதோப்பு கணேஷ் நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சுபனேஷ் என்ற சிவா (25) என்பதும், முன்பகை காரணமாக ஒருவரை கொலை செய்யும் நோக்கில் வாள் வைத்திருந்ததும் தெரியவந்ததாம். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இளைஞரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com