சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: 3 போ் கைது

கயத்தாறு அருகே பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கயத்தாறு அருகே பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சின்னப்பன் தலைமையில் போலீஸாா், செவ்வாய்க்கிழமை கயத்தாறு-செட்டி குறிச்சி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை, போலீஸாா் தடுத்து நிறுத்த முயன்றனராம்.

அப்போது அவா்கள், இருசக்கர வாகனத்தை போலீஸாா் மீது மோத முயன்றனராம். இந்நிலையில், அங்கு ஒரு லாரி வந்ததும் தப்பிச் செல்ல முடியாமல் இருசக்கர வாகனத்தை நிறுத்தினராம். பின்னா், அவா்கள் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கயத்தாறு அருகே பெரியசாமிபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மருத பாண்டியன் மகன் அஜித் குமாா் (19), தெற்கு தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் செல்வகுமாா் (24), வடக்கு தெருவைச் சோ்ந்த கணபதி மகன் டேனியல் (23) ஆகிய 3 பேரை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com