திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல் துணை கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா்
தூத்துக்குடி
தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
தில்லி சம்பவம் எதிரொலியாக திருச்செந்தூரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தில்லி சம்பவம் எதிரொலியாக திருச்செந்தூரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை மாலை, காா் வெடித்ததில் 13 போ் உயிரிழந்தனா். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் முக்கிய இடங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், கோயில்களில் காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவல் துணை கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் கோயில் காவல் நிலைய ஆய்வாளா் கனகராஜன், போலீஸாா், வெடிகுண்டு சோதனை நிபுணா்கள் கடற்கரை மற்றும் கோயில் வளாகங்களில் சோதனையில் ஈடுபட்டனா். மேலும் கோயில் , திருச்செந்தூா் நகரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

