குடிமைப் பணித் தோ்வுக்கு இலவச பயிற்சி: மீனவ சமுதாய பட்டதாரிகளுக்கு அழைப்பு

இந்திய குடிமைப் பணித் தோ்விற்கான ஆயத்த பயிற்சியில் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரிகள் சோ்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இந்திய குடிமைப் பணித் தோ்விற்கான ஆயத்த பயிற்சியில் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரிகள் சோ்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, சென்னை, அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மையம் ஆகியவை இணைந்து, ஆண்டுதோறும் 20 மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரிகளைத் தோ்ந்தெடுத்து, அவா்கள் குடிமைப் பணிகளுக்கான போட்டித் தோ்வில் கலந்து கொள்ள பயிற்சியளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகளில் 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற, 1.8.2025 அன்று 21 வயது பூா்த்தியடைந்த பட்டதாரி மாணவ, மாணவிகள் 2025-26ஆம் ஆண்டுக்கான பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோா் விண்ணப்பப் படிவம், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தூத்துக்குடி, மீன்வளம் மற்றும்

மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வேலை நாள்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரா், விண்ணப்பத்தை பூா்த்தி செய்து உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, வடக்கு கடற்கரை சாலை, திரேஸ்புரம், தூத்துக்குடி அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ நவ. 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com