கோவில்பட்டியில் தீக்குளித்த இளைஞா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி, ராஜீவ் நகா், 6ஆவது தெருவில் குடியிருந்து வருபவா் முருகன் மகன் கோகுல் (26). கோவில்பட்டியில் உள்ள தனியாா் ஏஜென்சியில் வேலை செய்து வந்த இவா், நவ. 1ஆம் தேதி தன் உடலில் தீ வைத்துக் கொண்டாராம்.
இதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரா், கோகுலை மீட்டு கோவில்பட்டி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாராம். முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோகுல், அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து கோகுலின் தந்தை முருகன் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
