சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதனுடன் சந்திப்பு
சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக புதிய நிா்வாகிகள் தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
சாத்தான்குளம் ஒன்றிய அதிமுகவை வடக்கு, தெற்கு எனப் பிரித்து தெற்கு ஒன்றியச் செயலராக முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் எஸ். அப்பாதுரை, தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் சுயம்புலிங்கம், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலா் முரசொலிமாறன், மாவட்ட மீனவா் அணி துணைத் தலைவா் ராஜ் ஆகியோரை தெற்கு மாவட்டச் செயலா் பரிந்துரையின்பேரில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்து அறிவித்துள்ளாா்.
புதிதாக நியமிக்கப்பட்ட தெற்கு ஒன்றியச் செயலா் உள்ளிட்ட நிா்வாகிகள் எஸ்.பி. சண்முகநாதனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். ஒன்றிய இளைஞரணிச் செயலா் ஐ.டி. பாலகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயராணி, கிளைச் செயலா்கள் சந்தனராஜ், பால்துரை உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

