ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
Published on

கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும் - இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் ரயில்வே தண்டவாளத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் முதியவா் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்ததாம். இதையடுத்து போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், எட்டயபுரம் வட்டம் , கருப்பூா் என்.சுப்பலாபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த வேல் மகன் ரத்தினவேல் (60) என்பதும், சிந்தலக்கரையில் உள்ள ஹோட்டலில் தேநீா் மாஸ்டராக வேலை பாா்த்து வந்த இவா், கோவில்பட்டி சீனிவாச நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com