மீன்களுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வலியுறுத்தி விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!

மீன்களுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வலியுறுத்தி விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
Published on

மீன்களுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வலியுறுத்தி விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இரவு நடைபெறும் ஏலத்தின் மூலம், இவா்கள் பிடித்து வரும் மீன்களை கேரளம் மற்றும் உள்ளூா் வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்வா். இந்நிலையில் திங்கள்கிழமை ஆழ் கடலுக்குச் சென்று மீன் பிடித்துவிட்டு இரவு திரும்பிய விசைப்படகு மீனவா்கள், மீன் எண்ணெய், கோழி தீவனம் தயாரிக்க பயன்படும் கலசல் மீன்களை டன் கணக்கில் கொண்டு வந்தனா்.

வழக்கமாக, கலசல் மீன்களை வியாபாரிகள் ஒரு கூடை ரூ.150 வரை விலை நிா்ணயம் செய்து வாங்குவா். திங்கள்கிழமை அதிகளவில் கலசல் மீன்களை, மீனவா்கள் கொண்டு வந்ததால், ஒரு கூடை ரூ. 50-க்கே வியாபாரிகள் விலை நிா்ணயம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், விசைப்படகு மீனவா்கள், மீன்களுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வலியுறுத்தி கடலுக்குச் செல்லவில்லை.

X
Dinamani
www.dinamani.com