ஆறுமுகனேரியில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளுக்கு அடிக்கல்

ஆறுமுகனேரி மடத்துவிளை அரசு உதவி பெறும் சந்தன சம நடுநிலைப் பள்ளியில் மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 36 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
Published on

விழாவிற்கு பேரூராட்சி செயல் அலுவலா் உஷா முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜோஸ்பின் ரினிட்டி ­­ன் வரவேற்றாா். பேரூராட்சி தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்து கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா். முன்னதாக, ஆறுமுகனேரி பங்குத்தந்தை டேவிட் சகாய வலன் அடிகளாா் ஜெபம் செய்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தாா்.

இதில், பேரூராட்சி உறுப்பினா் தயாவதி, சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திக், பணி ஆய்வாளா் இளையராஜா, அருட்சகோதரி தாமஸ் லீமாரோஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com