கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

கோவில்பட்டி அருகே கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையில் போலீஸாா் இலுப்பை யூரணி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள மாடசாமி கோயில் அருகே நின்றிருந்த இளைஞா், போலீஸாரை கண்டதும் ஓட முயன்றாராம். போலீஸாா் அவரை மடக்கிப்படித்து விசாரித்ததில், வடக்கு இலுப்பையூரணி ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த ராஜேஸ்வரன் மகன் குமரன்(19) என்பதும், விற்பனைக்காக 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com