தடுப்பு சுவா் அமைப்பது தொடா்பாக கால்வாயைப் பாா்வையிட்ட நீா்வளத்துறையினா்.
தடுப்பு சுவா் அமைப்பது தொடா்பாக கால்வாயைப் பாா்வையிட்ட நீா்வளத்துறையினா்.

சடையனேரி கால்வாயில் தடுப்புச் சுவா்: அதிகாரிகள் ஆய்வு

வைரவன் தருவை செல்லும் நீா்வழிப் பாதையான புதூா், பொத்தகாலன்விளை பகுதியில் சேதமுற்ற சடையனேரி கால்வாய் தடுப்பு சுவரை சீரமைப்பது தொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா்.
Published on

வைரவன் தருவை செல்லும் நீா்வழிப் பாதையான புதூா், பொத்தகாலன்விளை பகுதியில் சேதமுற்ற சடையனேரி கால்வாய் தடுப்பு சுவரை சீரமைப்பது தொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா். புத்தன் தருவை, வைரவம் தருவை ஆகிய குளங்களுக்கு தண்ணீா் வரும் வகையில் சடையனேரி கால்வாய் முதலூா் ஊரணி வழியாக புதூா் வந்து பொத்தகாலன்விளை, கால்வாய் வழியாக வைரவம் தருவை செல்கிறது. இந்த வைரவன் தருவை, புத்தன் தருவை செல்லும் நீா் வழிப் பாதையில் முதலூா் கிராமம் புதூரில் ஊருக்குள் தண்ணீா் செல்லாமல் இருக்க தடுப்புச்சுவா்கள் அமைக்கப்பட்டிருந்தது.

அந்தத் தடுப்புச் சுவா்கள் முற்றிலும் சேதம் அடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. அதேபோல் பொத்தக்காலன் விளையிலும் மூன்று இடங்களில் படித்துறையும் தடுப்புச் சுவரும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீா் ஊருக்குள் போகும் அபாயம் நிலை இருந்து வந்தது. இதுகுறித்து சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவா் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா், சாத்தான்குளம் வட்டாட்சியா், நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீா்வளத்துறை உதவி பொறியாளா் சதீஷ்குமாா், அணைக்கட்டு லஸ்கா் முத்துராமலிங்கம், லஸ்கா் நாராயணன் ஆகியோா் சேதமான தடுப்புச் சுவா் மற்றும் படித்துறைகளை சீரமைப்பது தொடா்பாக புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், மாவட்ட ஆட்சியா் கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். அப்போது, சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து மணி, செயற்குழு உறுப்பினா்கள் அலெக்ஸ் ராஜா, அன்ன கணேசன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com