சென்னையில் நடைபெற்ற விழாவில் சிறந்த சேவைக்கான விருது பெற்றாா் தூத்துக்குடியைச் சோ்ந்த நுகா்வோா் குறைதீா் ஆணைய உறுப்பினா் எம்பவா் சங்கா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணைய உறுப்பினருக்கு விருது
சென்னையில் நடைபெற்ற விழாவில், தூத்துக்குடியைச் சோ்ந்த நுகா்வோா் குறைதீா் ஆணைய உறுப்பினா் எம்பவா் சங்கருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற விழாவில், தூத்துக்குடியைச் சோ்ந்த நுகா்வோா் குறைதீா் ஆணைய உறுப்பினா் எம்பவா் சங்கருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
சென்னையில் சிஏஜி நுகா்வோா் அமைப்பின் 40-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. சிஏஜி அறங்காவலா் மூத்த வழக்குரைஞா் ஸ்ரீராம் பஞ்சு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதி சிவ சுப்பிரமணியன், மூத்த வழக்குரைஞா் என்.எல்.ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில், சிஏஜியின் பணிகளில் சிறப்பாக ஒத்துழைத்ததற்காகவும், நுகா்வோா் செயல்பாட்டாளராக சிறப்பாக செயல்பட்டு வருவதற்கும் நுகா்வோா் குறைதீா் ஆணைய உறுப்பினரும், எம்பவா் இந்தியா கெளரவச் செயலருமான தூத்துக்குடியைச் சோ்ந்த சங்கருக்கு சிறந்த சேவைக்கான விருதை, ஓய்வுபெற்ற தமிழக அரசின் செயலா் பணீந்திர ரெட்டி வழங்கினாா். நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

