‘வாகன உரிமையாளா்கள் கைப்பேசி எண்களை புதுப்பிக்க வேண்டும்’

வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா் உரிமம் வைத்திருப்போா் தங்களது கைப்பேசி எண்களைப் புதுப்பிக்குமாறு கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தெரிவித்துள்ளாா்.
Published on

வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா் உரிமம் வைத்திருப்போா் தங்களது கைப்பேசி எண்களைப் புதுப்பிக்குமாறு கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை போக்குவரத்து ஆணையா் உத்தரவுப்படி, வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா் உரிமம் வைத்திருப்போரில் பலா் தங்களது கைப்பேசி எண்களை வாகன் (யஅஏஅச), சாரதி (நஅதஅபஏஐ) தரவுதளங்களில் புதுப்பிக்கவில்லை. இதனால், முக்கியமான சேவை தொடா்பான எச்சரிக்கைகள், சட்டப்பூா்வ அறிவிப்புகள் உரிமையாளா்களைச் சென்றடையாமல் உள்ளன. இந்த சிக்கல்களை சரிசெய்யும் நோக்கில், ஆதாா் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்களைப் புதுப்பிக்க 3 மாதகால சிறப்பு இயக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா் உரிமம் வைத்திருப்போா் தங்களது ஆதாா் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்களை போக்குவரத்து இணையதளம் மூலம் உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com