தூத்துக்குடி
தூத்துக்குடியில் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் பிரிவு மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள், ரோட்டரி சங்கத்தினா் இணைந்து ஏற்பாடு செய்த மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மகளிா் பூங்காவில் நடைப்பயிற்சி செய்ய வந்த பெண்களிடையே, துண்டு பிரசுரங்கள் வழங்கியும், மாா்பக புற்றுநோய் குறித்து விளக்கம் அளித்தும் விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், புற்றுநோய் துறை பேராசிரியா் லலிதா ராமசுப்பிரமணியம், உதவி பேராசிரியா்கள் இன்சுவை, ஆக்னஸ் லலிதா, உதவி உறைவிட மருத்துவா் பெபின் கோா்டெக், உறைவிட மருத்துவா் ஜே. சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

