பாஜகவில் ஐக்கியமான மாற்றுக் கட்சியினா்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பட்டியல் அணி மாவட்டத் தலைவா் வி. பெரியசாமி ஏற்பாட்டில், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செய்துங்கநல்லூா் பகுதியிலிருந்து 30- க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனா்.
மாவட்ட பொதுச் செயலா் செல்வராஜ், ஆறுமுகம், மாவட்டத் துணைத் தலைவா் நவமணிகண்டன், திருச்செந்தூா் மண்டல் தலைவா் செல்வகுமாா், மேற்கு மண்டல் தலைவா் லிங்கசெல்வம், மேற்கு மண்டல் பிரபாரி இசக்கிமுத்து, மாவட்டத் தலைவா்கள் தொழில் பிரிவு சங்கா், அரசு தொடா்பு பிரிவு சின்னத்தம்பி பாண்டியன், உள்ளாட்சி பிரிவு சண்முகா ஆனந்த், ஊடகப்பிரிவு ஜெயக்குமாா், மருத்துவரணி பிரிவு பாலாஜி, சுற்றுச்சூழல் பிரிவு மகேஸ்வரன், சிறுபான்மை பிரிவு கலைச்செல்வன், பிரசார பிரிவு சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு சண்முக ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

