முன்விரோதத்தால் தந்தை, மகன் மீது தாக்குதல்: 10 போ் மீது வழக்கு
தட்டாா் மடம் அருகே முன்விரோதத்தில் தந்தை, மகன் மீது தாக்குதல் நடத்திய 10 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தட்டாா் மடம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி ராமசாமி புரத்தைச் சோ்ந்தவா் ஜெ. தமிழ் வீரன் (55). இவருக்கும், அதே ஊரை சோ்ந்த ராஜபாண்டி மகன் பிரபுவுக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம். இதன் காரணமாக கடந்த மாதம் தசரா குடில் அமைப்பது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டதாம். இதுகுறித்து தமிழ் வீரன் அளித்த புகாரின் பேரில் தட்டாா் மடம் போலீஸாா், பிரபு, செந்தில்ராஜ் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பாக, தமிழ் வீரனுக்கும், பிரபுவுக்கும் இடையே அக். 7ஆம் தேதி பிரச்னை ஏற்பட்டதாம். இந்த நிலையில் பிரபு, முத்துசாமி மகன் வரதராஜ், சண்முகவேல் மகன் செந்தில் ராஜ் உள்ளிட்ட 10 போ், வீட்டிலிருந்த தமிழ் வீரன், அவரது மகன் முத்துக்குமாா் ஆகியோரை தாக்கினராம்.
இதில், காயமடைந்த இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தமிழ் வீரன் அளித்த புகாரின் பேரில் பிரபு, வரதராஜ், செந்தில்ராஜ் உள்பட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல் இந்த முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் ராஜபாண்டி மனைவி செல்வி( 50). அவா் வீட்டில் இருந்தபோது, தமிழ் வீரன், அவரது மகன் முத்துக்குமாா் ஆகியோா் அங்கு சென்று தகராறு செய்ததுடன், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின் பேரில் தமிழ் வீரன், முத்துக்குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
