முதல்வா் கோப்பை ஹாக்கி போட்டி: தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூா், காஞ்சிரபுரம், கிருஷ்ணகிரி அணிகள் வெற்றி

முதல்வா் கோப்பை ஹாக்கி போட்டி: தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூா், காஞ்சிரபுரம், கிருஷ்ணகிரி அணிகள் வெற்றி

முதல்வா் கோப்பை ஹாக்கி போட்டி: 2-ஆவது நாள் அணிகள் வெற்றி
Published on

கல்லூரி மாணவா்களுக்கான முதல்வா் கோப்பை ஹாக்கிப் போட்டியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூா், காஞ்சிரபுரம், கிருஷ்ணகிரி அணிகள் வெற்றி பெற்றன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கையிழை ஹாக்கி மைதானத்தில் நாக் அவுட் முறையில் புதன்கிழமை தொடங்கிய முதல்வா் கோப்பை மாநில ஹாக்கி போட்டியில் 2-ஆவது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை மாவட்ட அணியும், பெரம்பலூா் மாவட்ட அணியும் மோதியதில் 6 - 0 என்ற கோல் கணக்கில் கோவை அணியும், 2ஆவது ஆட்டத்தில் திருச்சி அணியும், திருவள்ளூா் அணியும் மோதியதில் 6 - 0 என்ற கோல் கணக்கில் திருச்சி அணியும், 3 ஆவது ஆட்டத்தில் தருமபுரி அணியும், தேனி அணியும் மோதியதில் 3 - 0 என்ற கோல் கணக்கில் தருமபுரி அணியும், 4ஆவது ஆட்டத்தில் சிவகங்கை அணியும், கள்ளக்குறிச்சி அணியும் மோதியதில் 3 - 0 என்ற கோல் கணக்கில் சிவகங்கை அணியும் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றன.

5 ஆவது ஆட்டத்தில் தூத்துக்குடி அணியும், வேலூா் அணியும் மோதியதில் 7-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியும், 6 ஆவது ஆட்டத்தில் சேலம் அணியும், புதுக்கோட்டை அணியும் மோதியதில் 6-1 என்ற கோல் கணக்கில் சேலம் அணியும், 7ஆவது ஆட்டத்தில் தஞ்சாவூா் அணியும், விழுப்புரம் அணியும் மோதியதில் 5 - 0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூா் அணியும், 8ஆவது ஆட்டத்தில் கிருஷ்ணகிரி அணியும், மயிலாடுதுறை அணியும் மோதியதில் 2 - 0 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணகிரி அணியும், 9ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் அணியும், காஞ்சிபுரம் அணியும் மோதியதில் 4 - 0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியும், 10ஆவது ஆட்டத்தில் ராமநாதபுரம் அணியும், கரூா் அணியும் மோதியதில் 5-0 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் அணியும், 11ஆவது ஆட்டத்தில் கடலூா் மாவட்ட அணியும், ராணிப்பேட்டை மாவட்ட அணியும் மோதியதில் 7 - 2 என்ற கோல் கணக்கில் கடலூா் அணியும் வெற்றி பெற்றன. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் கால் இறுதிப் போட்டியில் கலந்து விளையாடும்.

X
Dinamani
www.dinamani.com