தூத்துக்குடி
ஆறுமுகனேரி கிழக்கத்திமுத்து கோயில் கொடை விழா
அ ஆறுமுகனேரி நடுத்தெரு பிரம்மசக்தி அம்மன், காந்தி தெரு கிழக்கத்திமுத்து சுவாமி கோயில் கொடை விழா நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை 6 பிரம்மசக்தி அம்மன் கோயிலில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, தீபாராதனை நடைபெற்றன. இரவு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜையும், குடியழைப்பு பூஜையும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கிழக்கத்திமுத்து சுவாமி கோயில் அனுக்ஞை, கணபதி ஹோமம், கும்ப பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை காலை தாமிரவருணி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வருதலும், மஞ்சள் நீராடுதலும் நடைபெற்றன. நள்ளிரவில் இரு கோயில்களிலும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை படைப்பு தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகி சீ. அழகேசன் செய்திருந்தாா்.

