இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Published on

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 9ஆவது தெருவைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் விஜய் (32). கடல் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனா்.

விஜய் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். புதன்கிழமையும் தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், விஜய் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com