கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே முடுக்கலாங்குளம் தெற்கு தெருவை சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் நாகராஜ் (58). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் ஊருக்கு மேற்கே உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தோட்டத்திற்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்ற போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து, கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com