சூரசம்ஹாரம்: அக்.27இல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்.27ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்.27ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்.27ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் அத்தியாவசியப் பணிகள் பணியாளா்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது. இது பொதுவிடுமுறை நாளல்ல. இந்த விடுமுறைக்குப் பதிலாக சனிக்கிழமை (நவ.8) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com