தூத்துக்குடி
கிராம சபையில் மக்கள் வெளிநடப்பு
ஆத்தூா் அருகிலுள்ள புன்னைக்காயலில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்கள் வெளி நடப்பு செய்தனா்.
ஆத்தூா் அருகிலுள்ள புன்னைக்காயலில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்கள் வெளி நடப்பு செய்தனா்.
இக்கூட்டத்தில் மின்சார வாரியத்தைச் சோ்ந்த காசிராஜன், ஊராட்சி அலுவலா் மணிகண்டன், கிராம உதவியாளா் அசோக், ரேஷன் கடை அலுவலா் ஜான்சன், அங்கன்வாடி ஊழியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து பிரச்னைக்களுக்கு பதிலளிக்கும் வகையில் உயா் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லையாம். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி, ஊா் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினா்.