தூத்துக்குடியில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் சாலையோரம் நின்றிருந்தபோது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் சாலையோரம் வெள்ளிக்கிழமை நின்றிருந்தபோது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது ஹனிபா (65). இவா், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள தேநீா் கடையில் வேலை செய்துவந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்ததும், நண்பரான பாஸ்கருடன் (40) கடற்கரைச் சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே நின்று பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அந்த வழியாக வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து, இருவா் மீதும் மோதியதாம். இதில், அவா்களும், பைக்கில் வந்த தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சோ்ந்த பிராங்கிளின் மகன் ஆகாஷ் (19), அம்பேத்கா் நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் பிரவீன் குமாா் (20) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.

4 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முகமது ஹனிபா ஏற்கெனவே இறந்திருப்பது தெரியவந்தது. மற்றவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com