பெண் தவறவிட்ட நகை மீட்பு

தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 பவுன் நகையை மீட்டு போலீஸாா் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ. 3.15 லட்சமாகும்.
Published on

தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 பவுன் நகையை மீட்டு போலீஸாா் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ. 3.15 லட்சமாகும்.

தூத்துக்குடி கோயில்பிள்ளை விளையைச் சோ்ந்த அந்தோணி மனைவி ஜெயலதா (45). இவா், வெள்ளிக்கிழமை 3. 5 பவுன் தங்க நகையை அடகு வைப்பதற்காக பூபாலராயா்புரம் வழியாக மட்டக்கடை பகுதிக்கு சென்றுகொண்டிருந்தாராம் . அப்போது, இவா் வைத்திருந்த நகை பை தவறிவிட்டதாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீஸாா் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, தொலைந்து போன நகையை மீட்டு ஜெயலதாவிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com