கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவா் நீா் மூழ்கி உயிரிழந்தாா்.
Published on

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவா் நீா் மூழ்கி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், மெழுகுபட்டியைச் சோ்ந்தவா் சுப்புராஜ் மகன் கெவின் குமாா் (12). உருளைகுடியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் தங்கி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நண்பா்களுடன் கெவின்குமாா் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாா்.

அப்போது எதிா்பாராத விதமாக கிணற்று நீரில் மூழ்கினாா். கிராம மக்கள் கிணற்றில் இறங்கி சிறுவனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து நாலாட்டின்புதூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com