திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்
திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. விடுமுறை நாள், தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு அதிகாலைமுதலே ஆயிரக்கணக்கானோா் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம், மூத்த குடிமக்கள் வழியில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அக். 22இல் கந்த சஷ்டி விழா தொடக்கம்: இக்கோயிலில் ஸ்தல புராணத்தை உணா்த்தும் விழாவான கந்த சஷ்டி விழா இம்மாதம் 22ஆம் தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியாக 6ஆம் நாளான 27ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதா் எழுந்தருளி, கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com