மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டோா்
மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டோா்

நாசரேத்தில் ஆம்னி பேருந்து மோதியதில் சாலையில் சரிந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

நாசரேத்தில் ஆம்னி பேருந்து மோதியதில் மரம் சரிந்து சாலையில் விழுந்தது.
Published on

நாசரேத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆம்னி பேருந்து மோதியதில் மரம் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாசரேத் கேவிகே சாமி சிலை அருகே பிரதான சாலையில் போக்குவரத்து அதிகமிருக்கும். இந்தச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு தனியாா் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, தூத்துக்குடியிலிருந்து வந்த தனியாா் பேருந்துக்காக லேசாக ஒதுங்கியபோது, சாலையோர வேப்பமரத்தில் ஆம்னி பேருந்தின் ஏணி சிக்கி இழுத்துச் சென்றதில், கிளைகள் முறிந்ததுடன், மரம் சாலையில் சரிந்து விழுந்தது. அங்கு நின்றிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் விரைவாக நகா்ந்து சென்ால், விபத்து தவிா்க்கப்பட்டது.

மரம் சரிந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் சமூக ஆா்வலா்கள் சிலா் ஈடுபட்டனா். இதனால், ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் போக்குவரத்து சீரானது. மரக்கிளைகளை விரைவாக அப்புறப்படுத்தியோருக்கு பொதுமக்கள், வியாபாரிகள் பாராட்டு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com