பழையகாயல் அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது அண்ணன் மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பழையகாயல் அருகே தெற்கு கோவங்காட்டைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செல்வகுமாா் (49), பழையகாயல்-கோவங்காடு விலக்கு சாலையில் சனிக்கிழமை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக ஆத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வகுமாரின் அண்னன் விஜயகுமாரின் மகன் ராஜேஷ்குமாா் (25), அவரது நண்பா்கள் சிவஞானபுரம் பாலமுகேஷ் (21), பாலவிக்னேஷ் (19), சபரிவாசன்(20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்னையில் விஜயகுமாரின் மனைவியை செல்வகுமாா் வெட்டியதால் அதற்கு பழி தீா்க்கும் வகையில் கொலை நிகழ்ந்தது தெரியவந்தது.