தூத்துக்குடி
கயத்தாறு அருகே செம்மண் கடத்தல்: லாரி பறிமுதல்
கயத்தாறு அருகே அனுமதியின்றி செம்மண் ஏற்றிவந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா், உரிமையாளரைத் தேடிவருகின்றனா்.
தூத்துக்குடி புவியியல்-சுரங்கத் துறை உதவி புவியியலாளா் முருகேஷ், உதவி இயக்குநா் ஆகியோா் கயத்தாறு-கடம்பூா் சாலையில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்குள்ள விவசாய நிலத்தின் வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் செம்மண் இருந்தது.
ஓட்டுநரிடம் அனுமதிச் சீட்டை கேட்டபோது, அவா் சீட்டு ஏதுமின்றி ஏற்றி வந்ததாக கூறியபடி தப்பியோடிவிட்டாராம்.
முருகேஷ் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா். ஓட்டுநா், உரிமையாளரைத் தேடிவருகின்றனா்.
