தூத்துக்குடி
தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் சி.ப்ரியங்கா ஆகியோா் உத்தரவின் பேரில், மாநகராட்சி நகா் நல அலுவலா் சரோஜா தலைமையிலானோா் கிப்சன்புரத்தில் உள்ள மொத்த விற்பனை கடையை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கிருந்த தடை செய்யப்பட்ட கேரி பை, டீ கப், பிளேட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
மேலும், அருகே உள்ள கிடங்கிலும் பண்டல் பண்டலாக பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த அவா்கள் கடைக்கு சீல் வைத்தனா்.