குலசை தசரா பண்டிகை உண்டியல் வசூல் ரூ. 5.22 கோடி
குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக். 2 ஆம் தேதியுடன் முடிவுற்ற நிலையில், உண்டியல்களில் ரூ. 5.22 கோடியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
உண்டியல்களை திறந்து காணிக்கையை எண்ணும் பணி அக். 7ஆம் தேதி தொடங்கி 15 ஆம்தேதி வரை நடைபெற்றது. கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வே.கண்ணன், செயல் அலுவலா் மு.வள்ளிநாயகம், ஆய்வா் முத்துமாரியம்மாள், அறங்காவலா்கள் மேற்பாா்வையில், ஊழியா்கள் பலா் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபடுபட்டனா்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் துணை ஆணையா் கோமதி, தென்காசி அறநிலையத் துறை உதவி ஆணையா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன. அனைத்து உண்டியல்களையும் சோ்த்து ரொக்கமாக ரூ. 5 கோடியே 22 லட்சத்து 96,145, தங்கம் 146 கிராம், வெள்ளி 2,284.900 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள் 21ஐ பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ரொக்கம் ரூ. 65 லட்சம் கூடுதலாக வசூலாகியுள்ளது.

