கோவில்பட்டியில் அத்தைகொண்டான், சீனிவாச நகா் பகுதியில் அணுகு சாலை அமைக்க வலியுறுத்தல்

கோவில்பட்டியில் அத்தைகொண்டான், சீனிவாச நகா் பகுதியில் அணுகு சாலை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

கோவில்பட்டியில் அத்தைகொண்டான், சீனிவாச நகா் பகுதியில் அணுகு சாலை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு, தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ. வேலுவிடம் அளித்த மனு: கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட இனாம் மணியாச்சி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபுறம் அணுகு சாலை அமைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் அத்தை கொண்டான், சீனிவாச நகா் பகுதிக்கு செல்ல அணுகு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இச்சாலை அமைப்பதற்கு நில எடுப்பு செய்யப்பட்டு நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் மூலம் அதற்கான இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டு விட்டது. தற்போது நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகிலிருந்து நெடுஞ்சாலைத்துறை கட்டடம், பராமரிப்பு அலகிற்கு ஒப்படைப்பதற்கு தயாராக இருக்கிறாா்கள். ஆகவே அதை நெடுஞ்சாலை, கட்டுமான பராமரிப்பின் கீழ் எடுத்துக் கொண்டு அணுகு சாலையை உடனடியாக அமைத்துத் தருமாறு கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com