கோவில்பட்டியில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவா் கைது

கோவில்பட்டியில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

கோவில்பட்டியில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டி தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சாஸ்திரி நகா் பிராமணாள் சமுதாய மயானம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவரது முதுகின் பின்னால் சட்டையில் அரிவாள் இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து போஸ் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த மாணிக்கவாசகம் மகன் கணேசன் (எ) குடஞ்சான் கணேசனை (31) கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com