தூத்துக்குடி
மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது
கோவில்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா்,
கோவில்பட்டி- மந்திதோப்பு சாலையில் பாண்டவா்மங்கலம் செல்லும் வழியில் உள்ள கறிக்கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட விஜயாபுரி நடுத்தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் மணிகண்டனை (45) வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்த 26 மது பாட்டில்கள், ரூ.600-ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா்.