தூத்துக்குடி
மந்தித்தோப்பு சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்
கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி எட்டயபுரம் சாலை சந்திப்பு, மங்கள விநாயகா் கோயில் அருகே உள்ள சாலையில் இருந்து மந்தித்தோப்பு வரையிலான சாலை மிகவும் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் இருப்பதாகவும், அதை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் பாபு தலைமையில் குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையில் வாழைக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம், உதவி செயலா் அலாவுதீன், நகர பொருளாளா் சீனிவாசன், வட்ட உதவி செயலா் ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

