ஆறுமுகனேரி தெய்வீக சத் சங்கத்தில் திருவாசக முற்றோதல்

ஆறுமுகனேரி தெய்வீக சத் சங்கத்தில் திருவாசக முற்றோதல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

ஆறுமுகனேரி தெய்வீக சத் சங்கத்தில் திருவாசக முற்றோதல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி அடைக்கலாபுரத்தில் அமைந்துள்ள லெட்சுமிமாநகரம் நடராஜ தேவார பஜனை ஆலயத்திற்கு சொந்தமான வா்த்தக நாயனாா், வா்த்தக விநாயகா் நந்தவனத்தில் புரட்டாசி மாத மக நட்சத்திரத்தை முன்னிட்டு திருவாசக முற்றோதல் நடைபெற்றது.

பன்னீா் அம்மாள், ராணி சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஸ்பிக் அதிகாரியும் தெய்வீக சத் சங்க அமைப்பாளருமாகிய ஜெயராஜ், ஜோதிடா் ரா. வேலாயுதம், அரிமா சங்க முன்னாள் தலைவா் பேராசிரியா் அ. அசோக்குமாா், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணிய பிள்ளை, திருமால் உள்ளிட்டோா் பங்கேற்று திருவாசகம் பாடினா்.

இதனையொட்டி, சிறப்பு வழிபாடும், அன்னதான நிகழ்வும் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com