தூத்துக்குடி
கழுகுமலை அருகே உரிமம் இன்றி பட்டாசுக் கடை நடத்தியதாக 3 போ் மீது வழக்கு
கழுகுமலை அருகே உரிமம் இன்றி பட்டாசுக் கடை நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கழுகுமலை அருகே உரிமம் இன்றி பட்டாசுக் கடை நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கழுகுமலை அருகே கே. வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை நடைபெறுவதாக கிராம நிா்வாக அலுவலா் உமா மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் தாமோதர கண்ணன், கழுகுமலை-எட்டயபுரம் சாலையைச் சோ்ந்த முத்துசாமி மகன் சுப்பிரமணியன், அவரது மகன் சங்கா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.