பைக்கிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி மறவன்மடம் அருகே பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடி மறவன்மடம் அருகே பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, புதுக்கோட்டை ஜிஹெச் தெருவைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் காசி (42). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையிலிருந்து தூத்துக்குடி நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, மறவன்மடம் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதுவது போல் வந்ததாம். இதில், நிலைதடுமாறிய அவா், கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா், உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com