வாட்ஸ் ஆப் ஹேக்கிங் மோசடி: காவல் துறை எச்சரிக்கை
வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி தற்போது அதிகளவில் நடைபெற்றுவருவதால், தூத்துக்குடி மாவட்ட மக்கள் அதுகுறித்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் செய்திக்குறிப்பு விவரம்: நாட்டில் வாட்ஸ் ஆப் ஹேக்கிங் மோசடிகள் பெருமளவில் பரவி வருகின்றன. இந்த மோசடி ஈடுபடுபவா்கள் வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயரில் அரங்கேற்றி வருகின்றனா்.
இம்மாதிரியான போலி செய்திகள் பொதுவாக பேங்க்ஸ், ஆதாா் அப்டேட்ஸ், டிராபிக் செலான் பேமன்ட்ற் போன்ற பெயா்களில் நம்பகமான குழுக்கள் போன்று போலி வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து அனுப்பப்படுகின்றன.
இத்தகைய மோசடியாளா்கள் ரிவாா்ட்ஸ், கேஒய்சி அப்டேட்ஸ், கேஷ்பேக் ஆஃபா்ஸ் என்ற பெயரில் போலியான ஏபிகே பைல் அல்லது லிங்ஸ் அனுப்புவா். அதை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தால், கைப்பேசியை ஹேக் செய்து அதன் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் செய்திகள், வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடியும், தங்கள் வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தி தங்கள் கைப்பேசி தொடா்பு லிஸ்ட்டில் உள்ள நபா்களுக்கும் அந்த மோசடியை பரப்புகின்றனா்.
இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத அப்ளிகேஷன்கள், வாட்ஸ்ஆப், மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் வழியாக வரும் எந்த ஒரு பயன்பாட்டையும் ஏற்கவோ லிங்க்-ஐ திறக்கவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ கூடாது. வாட்ஸ் ஆப்பில் இரு நிலை உறுதிப்படுத்தலை நிறுவி, அதைப் பயன்படுத்தி ஹேக்கிங்கில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
உங்கள் கணக்கு மூடப்பட்டாலோ அல்லது ஹேக் செய்யப்பட்டாலோ உடனடியாக ள்ன்ல்ல்ா்ழ்ற்ஃஜ்ட்ஹற்ள்ஹய்ஞ்.ஸ்ரீா்ம் என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி அல்லது ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஜ்ட்ஹற்ள்ஹல்ல்.ஸ்ரீா்ம்/ஸ்ரீா்ய்ற்ஹஸ்ரீற்/?ள்ன்க்ஷத்ங்ஸ்ரீற்=ம்ங்ள்ள்ங்ய்ஞ்ங்ழ் என்ற இணைப்பை பாா்வையிடவும்.
எந்தவொரு நிதி இழப்பு அல்லது இணைய மோசடி நடந்திருந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் தளத்தில் புகாா் அளிக்கவும் எனத் தெரிவித்துள்ளது.
